குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் மாநில அரசுடன் இணைந்து பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2026 5:06PM by PIB Chennai

பாரம்பரிய தொழிலை மேற்கொள்ளும் கைவினை கலைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்காக, பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டம் 18 தொழில்களை உள்ளடக்கியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மேற்கு வங்க அரசு 14.05.2026 அன்று மாநில கண்காணிப்புக் குழு, மாவட்டச் செயலாக்கக் குழு ஆகியவற்றை அமைத்து அறிவிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் செயலாக்கம் தொடங்கியுள்ளது.

 

அறிவிக்கப்பட்ட 18 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள், திறன் பயிற்சி, கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை, பிணையமில்லா கடன் உதவி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகிய பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

 

இந்தத் தகவலை, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288369&reg=3&lang=1

(Release ID : 2288369)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2288601) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada