கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழகத்தில் அரசு அருங்காட்சியகம் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:55PM by PIB Chennai

நாடு முழுவதும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மத்திய கலாச்சார அமைச்சகம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் பகுதிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. 2026-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சித் தலங்கள், பாரம்பரிய வளாகங்களின் மேம்பாடு என்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. அத்துடன் பிராந்திய மாநில, மாவட்ட அளவிலான அருங்காட்சியகங்கள் மேம்பாடு, நவீனமயமாக்கல், மின்னணுமயமாக்கல் ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கும் அருங்காட்சியக மானியத்திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி கடந்த 3 நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை திருகோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், ரூ.240 லட்சம் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் ரூ.224.95 லட்சம் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி அரசு அருங்காட்சியகம் ரூ.224.955 லட்சம் செலவிலும், உதகமண்டலம் மாவட்டத்தில் ஊட்டி அரசு அருங்காட்சியகம் ரூ.69 லட்சம் செலவிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்,  மாநிலங்களவையில் இன்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288292&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2288587) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी