அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தோரியம் அடிப்படையிலான அணுசக்தித் திட்டம் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு உறுதி செய்யப்படும்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:59PM by PIB Chennai

நாட்டின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், அணு எரிபொருள் சுழற்சியில் தன்னிறைவு பெறவும் தோரியம் அடிப்படையிலான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை அணுசக்தித் துறை ஊக்குவித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யுரேனியம் கையிருப்பு குறைவாகவும், தோரியம் வளம் பெருமளவிலும் உள்ளது. எனவே, யுரேனியத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கும், தோரியம் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் ‘மூன்று கட்ட அணுமின் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூடப்பட்ட எரிபொருள் சுழற்சி முறையிலான இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கழிவு எரிபொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் புளுட்டோனியம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு எரிபொருளாகப் பயன்படுகிறது.

இரண்டாம் கட்டத்திற்கான எரிபொருள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது. இதன் மறுசுழற்சி ஆலைகள் தாராபூர் மற்றும் கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன. மேலும், கல்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள முன்மாதிரி அதிவேகப் பெருக்கி அணு உலை 6 ஏப்ரல் 2026 அன்று முதன்மை நிலையை அடைந்து, இந்தியாவின் இரண்டாம் கட்ட அணுசக்திப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

மூன்றாம் கட்டத்தில் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம்-233 எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். கல்பாக்கத்தில் உள்ள 'காமினி' ஆராய்ச்சி உலைக்கு இத்தகைய எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், உருகிய உப்பு உலை போன்ற அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சிகளையும் அணுசக்தித் துறை மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288298&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2288574) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी