அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணுசக்தித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:59PM by PIB Chennai

சாந்தி சட்டத்தின் கீழ் விதிகளை வரைவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவை முறைப்படி அறிவிக்கப்பட்டு, அதன்பின்னரே தனியார் தரப்பினரின் உரிம விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் சாந்தி சட்டத்தின் 13 மற்றும் 14-வது பிரிவுகளின் கீழ், அணுசக்தி விபத்துகளுக்கான சிவில் இழப்பீட்டுப் பொறுப்பு தொடர்பான கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு அணுசக்தி விபத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய அதிகபட்சத் தொகை 300 மில்லியன் சிறப்பு வரைபயன் உரிமைக்குச் சமமான ரூபாய் மதிப்பு அல்லது மத்திய அரசால் குறிப்பிடப்படும் தொகையாகும். அணு உலைகளின் வெப்பத் திறனைப் பொறுத்து இயக்குபவரின் அதிகபட்ச இழப்பீட்டுப் பொறுப்பு ரூ.100 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இயக்குபவரின் பொறுப்பு வரம்பை மீறும் சூழல்கள், அரசுக்குச் சொந்தமான அணுசக்தி மையங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் தீவிர இயற்கை பேரிடர்கள் அல்லது மோதல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மத்திய அரசே இழப்பீட்டுப் பொறுப்பை ஏற்கும். இந்த இழப்பீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய, மின்சாரக் கட்டணம் மூலம் ‘அணுசக்திப் பொறுப்பு நிதியை’ மத்திய அரசு உருவாக்க முடியும். மேலும், தனியார் இயக்குபவர்கள் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன் உரிய காப்பீடு அல்லது நிதிப் பாதுகாப்பைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சார்ந்த ‘கட்டுப்படுத்தப்பட்ட தகவல்களை’ வெளியிடுவதிலிருந்து சாந்தி சட்டம் விலக்களிக்கிறது. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு இணக்கமாக உள்ளதுடன், அணுசக்திப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பொதுமக்களுடன் வெளிப்படையான தொடர்பை பேணவும் வழிவகை செய்கிறது.

மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288299&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2288568) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी