சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: தேசிய தூய்மை காற்று திட்டத்தின் மூலம் காற்றில் PM2.5 அளவுகள் குறைப்பு

प्रविष्टि तिथि: 23 JUL 2026 4:20PM by PIB Chennai

நாட்டின் 130 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 'தேசிய தூய்மை காற்று திட்டத்தின்' (NCAP) சாதகமான முடிவுகள் குறித்து மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ள விவரங்கள்:

காற்று மாசுபாட்டைக் குறைக்க 2019-20 முதல் 2025-26 வரை ₹16,423.56 கோடி செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 108 நகரங்களில் PM10 அளவுகள் குறைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் உள்ள 130 நகரங்களில் 65 நகரங்கள் PM2.5 அனுமதிக்கப்பட்ட தேசிய அளவை ( 40 µg/m³) எட்டியுள்ளன. (எ.கா: ஹைதராபாத் - 34, சூரத் - 32, மும்பை - 33 µg/m³).

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் உட்பட நாடு தழுவிய அளவில் உள்ளூர் அமைப்புகள் மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகவலைச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288316&reg=3&lang=1

****

TV/NB/SH


(रिलीज़ आईडी: 2288530) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी