அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உலகளாவிய ஏரோசோல் பன்முகத்தன்மை குறித்த ஆய்வு, பருநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:16PM by PIB Chennai
உலகின் பல்வேறு பகுதிகளில் ஏழு வகையான ஏரோசோல்களின் (காற்றில் உள்ள நுண்துகள்) பரவலில் உள்ள பிராந்திய வேறுபாடுகளையும், அவற்றுடன் தொடர்புடைய கதிர்வீச்சு விளைவுகளையும் ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. தெற்காசியா பெரும்பாலும் மாசுபாட்டுடன் கலந்த தூசியால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவே மிக உயர்ந்த ஏரோசோல் கதிர்வீச்சு விசையையும், வளிமண்டல வெப்பமயமாதல் விகிதங்களையும் உருவாக்குகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, பருவநிலை மாதிரிகளைச் செம்மைப்படுத்தவும் கணிப்புகளை மேம்படுத்தவும் உதவக்கூடிய, காற்றில் மிதக்கும் துகள்கள் குறித்த நீண்டகாலப் ஆய்வுக்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
வளிமண்டலத்தில் மிதக்கும் மிகச்சிறிய துகள்களான ஏரோசோல்கள், பூமியின் பருவநிலையை வடிவமைப்பதில் ஒரு முக்கியமான, சிக்கலான பங்கை வகிக்கின்றன. பாலைவனப் புழுதிப் புயல்கள் முதல் நகர்ப்புறக் கழிவுகள், காட்டுத் தீ வரை, இந்த நுண்ணிய துகள்கள் சூரிய ஒளியைப் பல்வேறு வழிகளில் சிதறடித்து, அதனுடன் வினைபுரிகின்றன. இதன் விளைவாக, அவை பூமியின் ஆற்றல் சமநிலையை மாற்றி, வானிலை, மேகங்கள், மழைப்பொழிவு ஆகியவற்றைப் பாதிக்கின்றன.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனங்களான, பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனமும் நைனிடாலில் உள்ள ஆரியபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும், பிற நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும், உலகளாவிய ஏரோசோல் வகைகளின் வகைப்பாடு, கதிர்வீச்சு விளைவுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
வளிமண்டலச் சூழல் இதழில் (Atmospheric Environment Journal ) இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீட்டு இணைப்பு: https://doi.org/10.1016/j.atmosenv.2025.121530
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288312®=3&lang=1
(Release ID : 2288312)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288525)
आगंतुक पटल : 7