அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இன்ஸ்பயர் திட்டத்தின் முன்னேற்றம்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:07PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் 'உத்வேகம் தரும் ஆராய்ச்சிக்கான அறிவியல் தேடலில் புத்தாக்கம்' (இன்ஸ்பயர் - INSPIRE) என்ற திட்டம், அதன் நான்கு முக்கியக் அம்சங்கள் மூலம் கல்வி, ஆராய்ச்சிப் பாதையின் வெவ்வேறு நிலைகளில் உள்ள அறிவியல் திறமைகளை முறையாக வளர்த்து வருகிறது. இன்ஸ்பயர் மானக் என்ற திட்டமானது, 10 முதல் 17 வயதுடைய (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிப்போர்) மாணவர்களைத் தனித்துவமான யோசனைகளையும் புத்தாக்கங்களையும் உருவாக்கி வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. இதன் மூலம், அவர்களிடையே புத்தாக்கத்தையும் அறிவியல் படைப்பாற்றலையும் அது வளர்க்கிறது. இன்ஸ்பயர் உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகைத் திட்டமானது, இயற்கை, அடிப்படை அறிவியல் துறைகளில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளைத் தொடரும் 17 முதல் 22 வயதுடைய தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் 12,000 என்ற எண்ணிக்கையில் கல்வி உதவித்தொகைகளை வழங்கி ஆதரவளிக்கிறது.
ஒவ்வொரு உதவித்தொகையும் ஆண்டுக்கு ₹80,000 மதிப்புடையது. இன்ஸ்பயர் ஆய்வு உதவித்தொகைத் திட்டமானது, முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மூலம் ஆராய்ச்சியைத் தொடர ஊக்குவிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் அறிவியல் மனப்பான்மையையும் ஆய்வுப் பண்பாட்டையும் வலுப்படுத்தி, புத்தாக்கத்தை வளர்த்து இளம் அறிவியல் திறமையாளர்களை ஊக்குவிக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288309®=3&lang=1
(Release ID : 2288309)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288522)
आगंतुक पटल : 7