அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பயோ இ3 கொள்கையின் அமலாக்கம்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:05PM by PIB Chennai
நாடு முழுவதும் ' உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை அதிகரிப்பதற்காக', மத்திய அமைச்சரவை 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயோ3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) எனும் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது. இக்கொள்கையானது, உயிரி சார்ந்த பொருட்களை உருவாக்குவதற்காக, நாட்டில் ஒரு மீள்திறன் கொண்ட உயிரி உற்பத்திச் சூழலமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விரிவான தேசிய கலந்தாய்வுகள், துறைசார் நிபுணர் கூட்டங்கள் மூலம், உயிரி உற்பத்தி முன்முயற்சியின் கீழ் செயல்படுத்துவதற்காக ஆறு கருப்பொருள் சார்ந்த துறைகள் அடையாளம் காணப்பட்டன. இந்தக் கருப்பொருள் சார்ந்த பிரிவுகளின் கீழ், நிதியுதவிக்காக 2000-க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டன. பல சுற்று பரிசீலனைகள், தேர்வுக் குழு கூட்டங்களுக்குப் பிறகு, 270-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் தற்போது செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
பயோ இ3 கொள்கையின் கீழ் மத்திய-மாநில ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பொருட்டு, 'பயோ இ3 கொள்கை மீதான மத்திய-மாநில ஒத்துழைப்பு மாநாடு' 2025 பிப்ரவரி 7-ம் தேதி புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது . இந்த மாநாட்டின் போது நடைபெற்ற கலந்துரையாடல்கள், உயிரி உற்பத்திக்கு மாநிலம் சார்ந்த கருப்பொருள் பகுதிகளை அடையாளம் காண்பது, மாநில பயோஇ3 செயல் திட்டங்களை வகுப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தின.
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288306®=3&lang=1
(Release ID : 2288306)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2288510)
आगंतुक पटल : 13