சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: தில்லி-என்.சி.ஆர் பகுதியில் குப்பை கிடங்குகளை பயனுள்ள முறையில் நிர்வகிக்க மத்திய அரசின் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 4:19PM by PIB Chennai
தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் (NCR) திடக்கழிவுகள் மற்றும் பழைய குப்பை கிடங்குகளை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:
முந்தைய 2016 விதிகளுக்குப் பதிலாக, ஏப்ரல் 1, 2026 முதல் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 அமல்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தடி நீர், காற்று மாசுபாடு மற்றும் துர்நாற்றத்தைத் தடுக்கும் வகையில் "சுகாதாரமான குப்பை நிரப்பும் தளங்களை" அமைக்க இவை வழிவகை செய்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இவை நிர்வகிக்கப்படும். மாநிலக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இதன் செயல்பாடுகளைத் தணிக்கை செய்து மத்திய போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். தில்லி-என்.சி.ஆர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 7 பெரிய குப்பை கிடங்குகளில், 4 தளங்களில் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலைச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288315®=3&lang=1
****
TV/NB/SH
(रिलीज़ आईडी: 2288508)
आगंतुक पटल : 8