கலாசாரத்துறை அமைச்சகம்
அருங்காட்சியகப் பொருட்கள் மின்னணுமயமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
23 JUL 2026 3:52PM by PIB Chennai
அருங்காட்சியக சேகரிப்புகள், ஆவணக்காப்பக வளங்களை மின்னணு மயமாக்குவதற்காக புனேயில் உள்ள சி-டிஏசி-யுடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட்ட ஜதன் மென்பொருளைப் பயன்படுத்தி மின்னணுமயமாக்கல் முயற்சியை மத்திய கலாச்சார அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இந்திய அருங்காட்சியகம் இணையதளம் மூலம், தேசிய அளவிலான மின்னணு தொகுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 தேசிய அளவிலான அருங்காட்சியகங்கள், 2 இந்திய தொல்பொருள் ஆய்வக பகுதிகளின் அருங்காட்சியகங்கள், புனேயில் உள்ள டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் ஆகியவற்றின் மின்னணுமயமாக்கப்பட்ட தொகுப்புகள், இடம் பெற்றுள்ளன. 2026 ஜூலை 15 நிலவரப்படி 4,88,983 கலைப்பொருட்களில் 3,75,707 கலைப்பொருட்கள் மின்னணுமயமாக்கப்பட்டு இணையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
https://museumsofindia.gov.in/repository என்ற இணையதளம் வாயிலாக இதனைக் காணலாம். அத்துடன் அருங்காட்சியக மானியத் திட்டத்தின் கீழ், அருங்காட்சியக சேகரிப்புகளை மின்னணுப்படுத்துவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் இதற்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள ஞானபாரத இயக்கம் இந்தியாவின் பரந்த கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் அதனுடைய நாகரீக அறிவுசார் மரபுகளை எதிர்காலத் தலைமுறையினருக்காக மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஞானபாரதம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மின்னணுமயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் உள்ளன.
இவை https://gyanbharatam.com/ என்ற இணையதளத்தில் காணலாம்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288288®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2288480)
आगंतुक पटल : 10