தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களை நவீனமாக்க அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 4:01PM by PIB Chennai

அனைத்து கிராம பஞ்சாயத்துகளையும் கருவிவட்ட (Ring Topology) முறையில் தரம் உயர்த்துவதற்காக, திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு 04.08.2023 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள 2,65,014 கிராம பஞ்சாயத்துகளில், பாரத்நெட் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் 2,14,912 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.  ஜூன் 2026 நிலவரப்படி, அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக, திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் கீழ் 13,494 கிராம பஞ்சாயத்துகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் சென்றடையப்படாத கிராமங்களில் 4ஜி சேவையை அரசு வழங்குகிறது. ஜூன் 2026 நிலவரப்படி, தொலைதூர மற்றும் எல்லைப்புற கிராமங்கள் உட்பட நாடு முழுவதும் 35,022 கிராமங்கள்/இடங்களை உள்ளடக்கி, 24,784 கோபுரங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

 நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களை நவீனமாக்குவதற்காக அஞ்சல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. முழுமையான கணினிமயமாக்கல் மற்றும் தனிக்குறியாக்கப்பட்ட இணைப்புக்காக, தகவல் தொழில்நுட்பம்  2.0 திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப தளத்திற்கு, இப்பகுதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு எங்கிருந்தும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக, அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் மைய வங்கித் தீர்வு செயல்படுத்தப்பட்டுள்ளது. நெட் வங்கிச் சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா  எந்திரம் (ஏடிஎம்), இந்திய அஞ்சல் பரிவர்த்தனை வங்கி, இ-பணவிடை,  கண்காணித்தல் மற்றும் தடமறிதல், செல்பேசி அடிப்படையிலான சேவைகள் போன்ற டிஜிட்டல் சேவைகள் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பார்சல் மற்றும் எடை அதிக பொருட்கள் அனுப்பும்  சேவைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி, இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288301&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2288476) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी