அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர்-ன் நான்கு தொழில்நுட்பங்களுக்கான உரிமம் தொழில் துறைக்கு வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 10:04AM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) தயாரித்த நான்கு உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் தொழில் துறைக்கு வழங்கப்பட்டது. புதுதில்லியில் அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைச்செல்வி முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சண்டிகரில் உள்ள அறிவியல் உபகரணங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், கிராமப்புற குடிநீர் சேவை வழங்கலைக் கண்காணிப்பதற்கான தொழில்நுட்பம் வணிகரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.1.67 கோடி ராயல்டி தொகையையும் சிஎஸ்ஐஆர் பெற்றுக்கொண்டது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கலைச்செல்வி, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கல் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது எனக் கூறினார். தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தொழில் துறை சார்ந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அவர் விஞ்ஞானிகளைக் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288139&reg=3&lang=1

 

***

SS/PD/KR

 


(रिलीज़ आईडी: 2288325) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी