புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துல்லிய புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான முன்முயற்சிகள் மூலம் தேசிய மாதிரி ஆய்வுகள் நவீன மயமாக்கப்படுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2026 2:33PM by PIB Chennai

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை துல்லியமாக வெளியிடும் வகையிலும் பல்வேறு தரவுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புள்ளிவிவர கட்டமைப்பு குறித்த காலமுறை அடிப்படையிலான வழிமுறைகள் தொடர்பான ஆய்வுகளையும் இந்த அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அகில இந்திய தொழில் உற்பத்திக் குறியீடு, நுகர்வோர் விலைக் குறியிடு போன்றவை பொருளாதார வளர்ச்சியை துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையிலும் சர்வதேச புள்ளிவிவர தர நிலைகளுடன் ஒப்பீடு செய்யும் வகையிலும் அடிப்படை ஆண்டை கொண்டு உரிய திருத்தப்பணிகளை இந்த அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேசிய கணக்கு தொடர்பான புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக்குழுவின் பரிந்துரையின்பேரில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23-ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கென அமைக்கபட்டுள்ள நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின்படி நுகர்வோர் விலைக் குறியீட்டென் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2024-100 என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய திருத்தங்களில் புதிப்பிக்கப்பட்ட தரவுகள் அவற்றின் குறியீடுகள், மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு வழிமுறைகள், ஜிஎஸ்டி, பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகங்களின் தரவு தளங்கள் போன்ற அதிகாரபூர்வ ஆதாரங்களின் மேம்பட்ட பயன்பாடும் இதில் அடங்கும்.

மக்களவையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287623&reg=3&lang=1

***

SS/SV/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2288103) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी