மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-ல் ரூ.73,890 கோடி அளவிற்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:33PM by PIB Chennai

நாட்டில் மீன்வளர்ப்பு, நீர்வாழ் உயிரினத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் மீன்வளர்ப்பு துறை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2023-24 முதல் 2025-26 வரை) மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாரியாக நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் மீன்வள உற்பத்தி அதிகரித்துள்ளது. 2019-20-ல் 141.64 லட்சம் டன்னிலிருந்து 2024-25-ல் 197.17 லட்சம் டன்னான மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. மீன் ஏற்றுமதி 2019-20-ல் ரூ.46,666 கோடி அளவிற்கு நடைபெற்ற நிலையில் 2025-26-ல் ரூ.73,890 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287590&reg=3&lang=1

***

SS/IR/PS/SH

 

 

(रिलीज़ आईडी: 2288098) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी