கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டுறவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 5:29PM by PIB Chennai

கூட்டுறவுப் பயிற்சி நிறுவனங்களில் கல்வி மற்றும் பயிற்சி முன்முயற்சிகள் மூலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தளங்கள் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள ஆர்ஐசிஎம் போன்ற கூட்டுறவுப் பயிற்சி நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தல் முறைகளைக் கையாண்டு வருகின்றன. குறிப்பாக, டிஜிட்டல் பலகைகள், புரொஜெக்டர்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் கொண்ட நவீன வகுப்பறைகள் பயன்படுத்தப்படுவதுடன், மின்-உள்ளடக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமான கலப்பு முறை கற்றலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடும் முறையாகக் கண்காணிக்கப்படுகிறது.

 

கூட்டுறவுத் துறை வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள், புத்தாக்கப் பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு மேலாண்மை, வங்கி மற்றும் நிதியியல், நிர்வாகம், டிஜிட்டல் வங்கி மற்றும் கூட்டுறவுத் துறையின் பிற வளர்ந்து வரும் புதிய பகுதிகள் இத்தகைய பயிற்சித் திட்டங்களில் கற்பிக்கப்படுகின்றன.

இந்தத் தகவலை மத்திய உள்துறை  மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா  மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதில் மூலம் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287796&reg=3&lang=1

செய்தி அடையாள எண் 2287796

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2288089) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी