கூட்டுறவு அமைச்சகம்
பாரம்பரிய கைவினைஞர்கள் கூட்டுறவுச் சங்கங்கள்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 5:25PM by PIB Chennai
பாரம்பரிய கைவினைஞர்கள் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது குறித்தும், ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டம் உட்பட நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் கைத்தறி, ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கைவினைஞர் கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அங்கு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமும் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின்படி, பூரி மாவட்டத்தில் 756 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (என்சிடிசி) மூலம் இத்தகைய சங்கங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு உருவாக்கம், மதிப்புக்கூட்டுதல் மற்றும் கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கான நிதியுதவி, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் நவீன வணிக முறைகளைப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் கல்வி போன்ற முக்கிய ஆதரவுகள் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு வளர்ச்சிக்காக ஒடிசா மாநிலத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரத்து 352 ரூபாயை என்சிடிசி விடுவித்துள்ளது. அங்குள்ள 17 செயல்பாட்டு கைவினைஞர் கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு கைவினைப் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், கைவினைஞர்களை இ-வணிக தளங்களில் இணைக்க டிஜிட்டல் பயிற்சிகளும், அவர்களின் தயாரிப்புகளை விற்க மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287792®=3&lang=1
செய்தி அடையாள எண் 2287792
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2288088)
आगंतुक पटल : 6