பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து அமைப்புகளுக்கான மானியத் தொகை விடுவிப்பு

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:22PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 28 மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில் மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கடந்த 2021 முதல் 2026-ம் ஆண்டு வரை மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்ட மானியத் தொகைகள் குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழ்நாட்டிற்கு மானியத்தொகையாக 14,059 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 11,812.93 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 2,246.07 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விடுவிக்கப்படாமல் உள்ள மானியத்தொகை இந்தக் காலகட்டத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியத் தொகை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மானியத்தொகைகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது என்றும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பஞ்சாயத்து அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டு வரம்புக்குள் வருகிறது. எனினும் மத்திய பஞ்சாயத்து அமைச்சகம் திட்டங்களை செம்மையாக செயல்படுத்த ஏதுவாக கிராமப்புற பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்காக மானியத் தொகையை வழங்கி வருகிறது.

மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287712&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2288071) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी