புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: மாவட்ட அளவில் வெப்ப அலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகள்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 2:13PM by PIB Chennai

இந்தியாவில் மாவட்ட அளவில் வெப்ப அலை பாதிப்பு அடிப்படையிலான முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் இருமுறை வெளியிட்டு வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்த முன்னறிவிப்புகள் பேரிடர் மேலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னஞ்சல், செயலிகள், சமூக ஊடகங்கள் மற்றும் பொது எச்சரிக்கை முறைமை வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ள 'இந்திய  வெப்ப அலை பாதிப்பு வரைபடத்தின்' மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களின் வெப்ப அலை பாதிப்புத் தன்மை மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் 0.54 புள்ளிகளுடன் 'அதிக பாதிப்புக்குள்ளாகும்' பிரிவில் உள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கைகள் சுகாதாரத் துறை, தொழிலாளர் துறை, ரயில்வே உள்ளிட்ட துறைகளுடன் பகிரப்படுகின்றன. மேலும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் எளிய வடிவில் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

2016 முதல் பருவக்கால மற்றும் மாதத்திற்கான முன்னறிவிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அமைப்புகளுடன் இணைந்து வெப்ப அலை தடுப்புத் திட்டங்கள் நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287608&reg=3&lang=1

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2288069) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी