பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கம்: மத்திய அமைச்சர் திரு ஜூவல் ஓரம் தகவல்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:08PM by PIB Chennai

தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின் கீழ், பாதிக்கப்பட்ட  பழங்குடியின மக்கள் வாழும் 17 மாநிலங்களில் 0 முதல் 40 வயது வரம்பிற்குட்பட்ட நபர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு ஜூவல் ஓரம், நாடு முழுவதும் 7.24 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இதில் 2.47 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு நோய் பாதிப்பும், 20.35 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இந்நோயின் காரணியும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மொத்தம் 804 பேருக்கு அரிவாள் செல் ரத்த சோகை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் 0-2 வயது வரை 4 பேர், 2-10 வயது வரை 131 பேர், 10-18 வயது வரை 242 பேர், 18-25 வயது வரை 138 பேர், 25-40 வயது வரை 258 பேர், 40 வயதிற்கு மேற்பட்டோர் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் 9,698 நபர்களில் இந்நோயின் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் தடையின்றி கிடைக்கவும், நோய் விழிப்புணர்வு, மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287698&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2288066) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu