உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 3:59PM by PIB Chennai

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் (என்டிஎம்பி) 2016-ம் ஆண்டு முதல் முறையாக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து 2019-ம் ஆண்டில் திட்டம் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட திட்டம் மத்திய மற்றும் மாநில அளவில் அனைத்து துறைகள், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் தங்களுக்குரிய பொறுப்புகளை வரையறுக்கிறது.

பேரிடர் அபாயக் குறைப்பு என்பது இதன் ஒருங்கிணைந்த அம்சமாகும்.

இந்திய பேரிடர் ஆதார கட்டமைப்பு , மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய அளவிலான துறைகள் மற்றும் ஏஜென்சிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை பட்டியலிடும் வளங்களின் நாடு தழுவிய மின்னணு இருப்பு ஆகும்.

இந்த தரவுத்தளமானது, குறிப்பிட்ட பேரிடர்களுக்கான ஆயத்த நிலை மற்றும் அவற்றின் இருப்பிடத்துடன் கூடிய உபகரணங்களின் இருப்பை மதிப்பிடுவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது, இது பேரிடர்களின் போது தேவைப்படும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/பங்குதாரர்களால் எளிதில் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்படலாம், விரைவான நடவடிக்கையை எளிதாக்கும்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=228677&reg=3&lang=1

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2288065) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी