பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பல்வேறு தரவுகளை அறிய உதவுகிறது
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:03PM by PIB Chennai
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குழந்தைகள் பாலின விகிதத்தை அறியவும் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாடு தொடர்பான சிக்கல்களை கையாள்வதில் உதவுகிறது. பல்வேறு தரப்பினருக்கு தகவல்களை அளித்தல், ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் பெண் குழந்தைகள் மீதான மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்த இத்திட்டம் முயற்சிக்கிறது.
இத்திட்டம், நாடு முழுவதும் பெண் குழந்தைகள் தொடர்பாக சமூக மாற்றங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் அறிக்கையின் படி தேசிய அளவில் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. 2014-15 முதல் 2024-25 வரையிலான காலத்தில் பாலின விகிதம் 918-லிருந்து 929 ஆக அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் தரவின் படி இடைநிலை கல்வி நிலையில் பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2014-15 75.51%-ஆக இருந்த நிலையில் 2025-26-ல் 83.4%-ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287683®=3&lang=1
****
TV/SV/SU/SH
(रिलीज़ आईडी: 2288061)
आगंतुक पटल : 11