புவி அறிவியல் அமைச்சகம்
பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு
प्रविष्टि तिथि:
22 JUL 2026 2:05PM by PIB Chennai
இந்தியாவில் புயல், மழை மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே மிகவும் துல்லியமாகக் கணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'பாரத் முன்னறிவிப்பு அமைப்பு' குறித்து மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
புதிய கட்டமைப்பு மூலம் இத்தொழில்நுட்பம் 6 கி.மீ சுற்றளவு இடைவெளியில் வானிலை முன்னறிவிப்பை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் 6 கி.மீ உயர் துல்லியத்தில் நிகழ்நேர உலகளாவிய வானிலை மாதிரியை இயக்கும் ஒரே நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 6 கி.மீ இடைவெளியில் கணிக்க முடிவதால், உள்ளூர் வானிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலைக்கு ஏற்பத் தனித்தனியாக முன்னறிவிப்புகளை வழங்கிட முடியும்.
இந்தத் துல்லியமான முன்னறிவிப்பானது விவசாயிகளுக்குப் பயிர் திட்டமிடல், நீர்ப்பாசனம் மற்றும் அறுவடை ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், பருவமழைக் காலத்தில் நீர்நிலைகளையும் அணைகளையும் சிறப்பாக நிர்வாகித்து வெள்ள அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்கிறது. காலநிலை மாற்றத்தால் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பருவமழைக் காலத்தில் பொழியும் அதிதீவிர மழையைக் கணிப்பதில் பாரத் கணிப்பு முறைமை மிகச் சிறந்த திறனை வெளிப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பேரிடர் மேலாண்மையை விரைவுபடுத்தி, பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287605®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2288041)
आगंतुक पटल : 10