உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:49PM by PIB Chennai
இடதுசாரி தீவிரவாதத்திற்குச் (LWE) சவாலாக 2015-இல் உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கை மற்றும் பலமுனை உத்திகள் மூலம் நாடு முழுமையாக இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு மத்திய உதவித் திட்டத்தின் (SCA) கீழ் 2017 முதல் ₹4,282.96 கோடி நிதி விடுவிக்கப்பட்டு, 15,189 கி.மீ நீளச் சாலைகள் அமைக்கப்பட்டன. தொடர்புகளை மேம்படுத்த 9,497 அலைபேசி கோபுரங்கள் (Telecom Towers) அமைக்கப்பட்டுள்ளன.
179 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகள் (EMRS), 47 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) மற்றும் 49 திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 6,025 அஞ்சல் அலுவலகங்கள், 1,804 வங்கி கிளைகள் மற்றும் 1,321 ஏடிஎம்கள் திறக்கப்பட்டு சேவை வழங்கப்படுகிறது.
இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287663®=3&lang=1
****
TV/NB/SH
(रिलीज़ आईडी: 2288029)
आगंतुक पटल : 6