அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்நுட்பம் அடிப்படையிலான திட்டங்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:20PM by PIB Chennai
நாட்டின் விளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை ஆதரவு அளித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் போட்டி மற்றும் தகுதியின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியினப் பெண்களின் பாதுகாப்பான, நிலையான உணவு உற்பத்திக்காக இயற்கை உரம் (கம்போஸ்ட்) தயாரித்தல், வீட்டுத் தோட்டம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ரூ.37.56 லட்சம் நிதி வழங்கப்பட்டதாகக் கூறினார். இதன் மூலம் 280 பழங்குடியின பெண் விவசாயிகள் பலனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அறிவியல் தொழில்நுட்ப வள மையம் சார்பில் மீன்வளம், மூங்கில் சார்ந்த வாழ்வாதாரம், வனப் பொருட்கள், கிராமப்புறத் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட ஐந்து முக்கியப் பிரிவுகளின் கீழ் 11 சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 1,021 பழங்குடியினக் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287711®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2287977)
आगंतुक पटल : 7