மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:28PM by PIB Chennai

மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் (பி. எம். எம். எஸ். ஒய்) கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தை மத்திய அரசின் மீன்வளத் துறை நேரில் நடத்தப்படும் கூட்டங்கள்மெய்நிகர் கூட்டங்கள்களப் பயணங்கள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்கிறது.

2020-21 முதல் 2026-27 வரை இத்திட்டத்தின்  கீழ்மகாராஷ்டிரா அரசு சமர்ப்பித்த மீன்வள மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு மத்திய மீன் வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,601.44 கோடியில்மத்திய அரசின் பங்கு ரூ.593.33 கோடியாகும். இதில்மத்திய அரசு ரூ.419.02 கோடியை விடுவித்துள்ளது.

மீன் உற்பத்தியை அதிகரிப்பதுஉற்பத்தித்திறன்உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல்குளிர்பதன நடைமுறைகள் சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்துதல்மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான வளங்கள், நடவடிக்கைகளின் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு மீன்வள நடவடிக்கைகள் இந்த ஒப்புதல்களில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ்பயனாளிகளின் தேர்வு மற்றும் திட்ட அமலாக்கம் அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களால் செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்மத்திய மீன் வளம்கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287585&reg=3&lang=1

 

***

SS/PKV/SH


(रिलीज़ आईडी: 2287973) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी