பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் டிஜிட்டல் முன்னேற்றம்: மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தகவல்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:25PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் இ-பஞ்சாயத்து இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இ-கிராம சுவராஜ் செயலி மூலம் கிராம பஞ்சாயத்துகளில் திட்டமிடல், கணக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள 2,58,730 கிராம பஞ்சாயத்துகளில் 98.65 சதவீதம் பஞ்சாயத்துகள் தங்களின் வளர்ச்சித் திட்டங்களை இச்செயலியில் பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறினார். மேலும் 95 சதவீதம் கிராம பஞ்சாயத்துகள் ரூ.57,337 கோடி அளவிலான பணப்பரிவர்த்தனைகளை இ-கிராம சுவராஜ் தளத்தின் வாயிலாக நேரடியாக மேற்கொண்டுள்ளன. பஞ்சாயத்து அமைப்புகளின் கணக்குகளை இணைய வழியில் தணிக்கை செய்ய ஆடிட் ஆன்லைன் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட தேசிய கிராம சுய்ராஜ்ஜிய திட்டத்தின் கீழ் 2023-24 முதல் 2026-27 வரையிலான காலத்தில் 3.73 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிரதிநிதிகள், பஞ்சாயத்து அலுவலர்களுக்கு டிஜிட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கிராமப்புற மக்களுக்கு பிறப்பு, இறப்பு, சாதி, வருமானச் சான்றிதழ்கள் உட்பட பல இ-சேவைகளை இணையவழியில் வழங்க பஞ்சாயத்துகள் ஊக்கப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287714®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2287942)
आगंतुक पटल : 7