உள்துறை அமைச்சகம்
சிஆர்பிஎப் சார்பில் 6.68 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன: மத்திய இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:57PM by PIB Chennai
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய ஆயுதக் காவல் படைகள் (சிஆர்பிஎப்) சார்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 6.68 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், மத்திய ஆயுதக் காவல் படைகள் மூலம் நாடு முழுவதும் 3,212 நாற்றங்கால்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தியாகிகளின் நினைவாக 1,995 தோட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டில் 2,12,371 மரக்கன்றுகளும், 2021-ம் ஆண்டில் 1,70,938 மரக்கன்றுகளும், 2022-ம் ஆண்டில் 1,33,604 மரக்கன்றுகளும் நடப்பட்டன. அதேபோன்று 2023-ம் ஆண்டில் 2,43,266 மரக்கன்றுகளும், 2024-ம் ஆண்டில் 1,28,603 மரக்கன்றுகளும், 2025-ம் ஆண்டில் 92,298 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 9,81,080 மரக்கன்றுகள் நடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287676®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2287910)
आगंतुक पटल : 10