புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்கும் வெளியிடுவதற்கும் சிறந்த நடைமுறையை மத்திய புள்ளியியல் அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUL 2026 2:35PM by PIB Chennai

அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்கும், அது தொடர்பான அறிக்கைகளைக் குறித்த நேரத்தில்  வெளியிடுவதற்கும் சிறந்த நடைமுறைகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்புக்கான முதன்மை தரவுகளைச் சேகரிப்பதில் கணினி உதவியுடன் கூடிய நேர்காணல் அடிப்படையிலான டிஜிட்டல் தளங்கள், இ-சிக்மா அமைப்பு தரவுகளைப் பார்ப்பதற்கான கட்டமைப்புகள், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்கள், பன்மொழி இடைமுகங்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கணக்கெடுப்புக் குறித்த தரவுகளை சரிபார்ப்பதும், நிகழ்நேர விவரங்களை சமர்ப்பிப்பதற்கான வசதிகளை உறுதி செய்யும் வகையில், நிலையான டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், நேரடி சரிபார்ப்பு மற்றும் உயர்நிலை அதிகாரிகளின் சோதனை நடைமுறைகள் ஆகியவை குறித்த விதிமுறைகளின் அடிப்படையில் வழக்கமான முறையில் மேற்கொள்ளும் வகையில், தரவு சேகரிப்பதற்கான தரநிலைகள் குறித்தப் பயிற்சி களப்பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

தரவுகளின் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளுடன் தரவுகள் அடிப்படையிலான கணக்கெடுப்புப் பணிகள் 8 முதல் 9 மாத காலத்திலிருந்து 45 முதல் 90 நாட்கள் என்ற அளவிற்கு குறைக்க வகை செய்கிறது. வருடாந்தர கணக்கெடுப்பு முடிவுகள் 90 முதல் 120 நாட்களுக்குள் வெளியிடப்படுகின்றன.  காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் முடிவுகள் 45 முதல் 60 நாட்களுக்குள்ளும்,  முழுமையான மாதாந்தர முடிவுகள் 15 முதல் 45 நாட்களுக்குள் வெளியிடப்படுகின்றன. இதே போன்ற நுகர்வோர் விலைக் குறியீட்டெண் குறித்த தரவுகள், கணினி அடிப்படையிலான நேர்காணல் முறையில் சேகரிக்கப்பட்டு அவை புதிய அடிப்படை  ஆண்டான 2024-ன் கீழ் கணக்கிடப்பட்டு நிகழ்நேர சரிபார்ப்புப் பணிகள் முடிக்கப்பட்டு புவிசார் குறியீடு மற்றும் குறித்தக் கால தரநிலை, கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களவையில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287624&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2287905) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी