கனரகத் தொழில்கள் அமைச்சகம்
வாகனம், வாகன உதிரிபாகங்கள் மற்றும் மின்கல சேமிப்புக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 5:08PM by PIB Chennai
மேம்பட்ட வாகனத் தயாரிப்புகளுக்கான (AAT) இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில், வாகனம் மற்றும் வாகன உதிரிபாகத் தொழில்துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு 25,938 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்தது.
50 ஜிகாவாட் அவர் திறன் கொண்ட 'மேம்பட்ட வேதியியல் மின்கல சேமிப்புக்கான தேசியத் திட்டத்திற்கான’ (ACC) உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு 18,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவொரு பயனாளி நிறுவனமும் ஊக்கத்தொகை எதையும் கோரவில்லை. பயனாளி நிறுவனங்களின் தகவல்களின்படி, 31.05.2026 வரையிலான காலத்தில் இந்தத் திட்டம் 5,180 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 1,277 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது.
வாகனம் மற்றும் வாகன உதிரிபாகத் தொழில்துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 31.03.2026 வரை நாடு முழுவதும் 255 உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் 38 ஆலைகள் தமிழ்நாட்டிலும், 1 ஆலை புதுச்சேரியிலும் அமைந்துள்ளன.
மேம்பட்ட வேதியியல் மின்கல சேமிப்புக்கான தேசியத் திட்டத்திற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 20 ஜிகாவாட் அவர் திறன் கொண்ட ஓலா செல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் இயங்குகிறது.
மத்திய கனரகத் தொழில்துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா, இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287137®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2287510)
आगंतुक पटल : 7