மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தமிழ்நாட்டில் மீன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 3:05PM by PIB Chennai
தமிழ்நாட்டில் 2021-22-க்குப் பின்னர் 8 மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த 105 கூட்டுறவு சங்கங்கள் அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.
மத்திய மீன்வளத் துறையால் செயல்படுத்தப்படும் பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ், மீனவ விவசாயிகள், மீன் விவசாயிகள் ஆகியோரை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைப்பதற்கான நிதி உதவியை அரசு வழங்குகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (நிதியாண்டு 2021-22 முதல் நிதியாண்டு 2025-26 வரை) மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை ரூ. 544.86 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு மத்திய முகமைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் மக்களவையில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286995®=3&lang=1
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2287503)
आगंतुक पटल : 10