மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஒடிசாவில் மீன்பிடித் துறை சார்ந்த திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2026 2:59PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் உட்பட நாடு முழுவதும் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் முழுமையான வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் செயல்படுத்தி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் (2014-15 முதல்), 'நீலப் புரட்சி', 'பிரதமரின் மீன் வளத் திட்டம் ஆகியவற்றின் கீழ், பாலசோர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்காக, ஒடிசா அரசின் ரூ ,567.96 கோடி மதிப்பிலான திட்ட முன்மொழிவுகளுக்கு மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது; இதில் மத்திய அரசின் பங்கு ரூ 549.58 கோடியாகும். மேலும், 'மீன்வளம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்' கீழ், ஒடிசாவிற்கு மொத்தம் ரூ 784.32 கோடி மதிப்பிலான மற்றும் ரூ 286.39 கோடி வரையிலான வட்டி மானியத்துடன் கூடிய 13 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாலசோர் மாவட்டம் உட்பட ஒடிசா முழுவதும் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்காக மாநில அரசால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் இந்தத் தகவலை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286990®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2287500)
வருகையாளர் எண்ணிக்கை : 24