அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஐந்து புதிய பூஞ்சை இனங்கள் கண்டுபிடிப்பு

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:11PM by PIB Chennai

இந்தியாவின் பல்லுயிர் வளம் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், காடுகளின் வளத்திற்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் அடையாளமாக விளங்கும் அலோக்ராஃபா வகையைச் சேர்ந்த ஐந்து புதிய பாசிப் பூஞ்சை இனங்களை ஆய்வாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் புனே அகர்க்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மரபுசார் வகைப்பாட்டியல் முறைகளுடன் நவீன மூலக்கூறு மரபியல் பகுப்பாய்வு முறைகளை ஒருங்கிணைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் வெப்பமண்டலக் காடுகள் பகுதிகளில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் மூலம் அலோக்ராஃபா கேரளென்சிஸ், அலோக்ராஃபா நாயகே, அலோக்ராஃபா பாராகான்சங்குவேனியா, அலோக்ராஃபா பெர்சிஸ்டின்ஸ்பெர்சா, அலோக்ராஃபா செமிகார்பனிசேட்டா ஆகிய ஐந்து புதிய பூஞ்சை இனங்கள் கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு மிக விரைவில் உள்ளாக கூடிய இந்த உயிரினங்களைக் கண்டறிவது, சூழலியல் உணர்திறன்மிக்கப் பகுதிகளை அடையாளம் காணவும், காடுகளின் பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பதற்கானக் கொள்கைகளை உருவாக்கவும் பெரும் உதவியாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287004&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2287488) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी