ஜவுளித்துறை அமைச்சகம்
நீடித்த ஜவுளி, ஆடைத்துறையை மேம்படுத்தும் வகையில், ஜவுளி -சுற்றுச்சூழல் முன்முயற்சியை மத்திய அரசு அமல்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
21 JUL 2026 2:17PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் 2026-27-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் உலகளாவிய போட்டித்தன்மைமிக்க மற்றும் நீடித்த ஜவுளி, ஆடைத்துறையை மேம்படுத்தும் வகையில், ஜவுளி-சுற்றுச்சூழல் முன்முயற்சியை அறிவித்தார். இது ஆராய்ச்சி நிறுவனங்கள், ஜவுளி ஆராய்ச்சி சங்கங்கள், திறன்மேம்பாட்டு மையங்கள், தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள், இதர சம்மந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஜவுளி கழிவு மேலாண்மை மறுசுழற்சி, மதிப்புக்கூட்டல் உள்ளிட்ட சுழற்சி பொருளாதாரத்திற்கான புதுமையான தொழில்நுட்பங்களையும், கழிக்கப்பட்ட ஜவுளிகளிலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட இழைகள் புதிய பொருட்கள், இதர அதிக மதிப்புடைய பொருட்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், பசுமைத்தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, மறுசுழற்சி, கழிவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட சுற்றுசூழல் ரீதியாக நீடித்த உற்பத்தி நடைமுறைகளின் அதிகரித்துவரும் உலகளாவிய முக்கியத்துவத்தையும், மேம்பட்ட உலகளாவிய போட்டித்தன்மை, மேம்பட்ட சந்தை அணுகல், மேம்பட்ட சுற்றுத்சூழல், வலுப்படுத்தப்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் பயன்களையும் கருத்தில்கொண்டு மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரேட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286964®=3&lang=1
****
TV/IR/GS/SH
(रिलीज़ आईडी: 2287485)
आगंतुक पटल : 4