ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய தொழில்நுட்ப ஜவுளிகள் இயக்கத்தின்கீழ் தமிழ்நாட்டில் 6 புத்தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் -மத்திய அமைச்சர் திரு பபித்ரா மார்கரேட்டா
प्रविष्टि तिथि:
21 JUL 2026 2:15PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்ப ஜவுளிகள் இயக்கத்தின்கீழ், தொழில்நுட்ப ஜவுளிகளில் ஆர்வமுடைய புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆராய்ச்சி, தொழில்முனைவுக்கான மானிய நிதியுதவியை மத்திய ஜவுளி அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் 2023-ம் ஆண்டுமுதல் இந்த இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15.40 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் பங்களிப்பு ரூ.13.65 கோடி ஆகும்.
இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 6 புத்தொழில் திட்டங்கள் உட்பட 10 மாநிலங்களில் 31 புத்தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் தலா ஒரு புத்தொழில் திட்டத்திற்கும், தஞ்சாவூரில் 2 புத்தொழில் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின்கீழ் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. சென்னை, சேலம், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா ஒரு கல்வி நிறுவனத்திற்கும், கோயம்புத்தூரில் 6 கல்வி நிறுவனங்களுக்கும் நாமக்கல்லில் 2 கல்வி நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரேட்டா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286962®=3&lang=1
****
TV/IR/GS/SH
(रिलीज़ आईडी: 2287484)
आगंतुक पटल : 11