மருந்துகள் துறை
உர இறக்குமதியைக் குறைக்க அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
21 JUL 2026 1:55PM by PIB Chennai
உரங்கள் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உரங்கள் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
புதிய முதலீட்டுக் கொள்கை (என்ஐபி)-2012-ன் கீழ், ராமகுண்டம், கோரக்பூர், சிந்த்ரி, பரவுனி ஆகிய இடங்களில் நான்கு பொதுத்துறை கூட்டு நிறுவனங்களும், பனாகர் மற்றும் காதேபன்-III ஆகிய இடங்களில் இரண்டு தனியார் துறை அலகுகளும் யூரியா உற்பத்தி திறனை வெகுவாக அதிகரித்துள்ளன. இதன் விளைவாக ஆண்டுதோறும் 20-25 லட்சம் மெட்ரிக் டன் யூரியா கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்பேடிக் உரங்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும், அவற்றின் உள்நாட்டு உற்பத்தியில் தற்சார்பை ஊக்குவிக்கவும், அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மருந்துகள் துறையின் சில திட்டங்களில் நிதி ஒதுக்கீடு குறைவாக பயன்படுத்தப்படுவது ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கவனத்துக்கு வந்துள்ளது.
உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டங்கள், மொத்த மருந்து பூங்காக்கள் மற்றும் தொடர்புடைய முன்முயற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக மருந்துத் துறையால் பல்வேறு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286949®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2287442)
आगंतुक पटल : 6