கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1085 கோடி ரூபாய் மதிப்பிலான 16 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUL 2026 2:25PM by PIB Chennai

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டில் 1085.6  கோடி ரூபாய் மதிப்பிலான 16 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள்கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த 1085 கோடியில் மத்திய அரசின் பங்கு 423.76 கோடி ரூபாய் என்றும்இதில் 421.91 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும்தமிழ்நாட்டில் 250.6 கோடி ரூபாய் மதிப்பிலான 8 திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட துறைமுகங்கள்கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் மத்திய துறை திட்டமாக சாகர்மாலா திட்டம் உள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ்துறைமுக நவீனமயமாக்கல்துறைமுக இணைப்புதுறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல்கடலோர சமூக மேம்பாடு மற்றும் கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து ஆகிய 5 தூண்களின் கீழ் திட்டங்களுக்கு நிதி உதவியை அமைச்சகம் வழங்குகிறது. பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டுடன் சாகர்மாலா திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கான மாநில வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286969&reg=3&lang=1

***

SS/PKV/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2287439) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी