ஆயுஷ்
தேசிய சுகாதார அமைப்பில் ஆயுஷ் மருத்துவ முறைகளின் ஒருங்கிணைப்பு
प्रविष्टि तिथि:
21 JUL 2026 3:55PM by PIB Chennai
மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருத்துவத்தை கொண்டு சேர்க்க, தேசிய சுகாதார திட்டத்தின் (NHM) கீழ் ஆயுஷ் மருத்துவ முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன
13,249 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC), சமூக சுகாதார மையங்கள் (CHC) மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 25,322 ஆயுஷ் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ மாணவர்களுக்கு ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவப் பயிற்சி விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
118 தனியார் மற்றும் 34 அரசு மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் தரக் கட்டுப்பாடு உறுதி செய்யப்படுகிறது. 'ஆயுஷ் சுரக்ஷா' போர்டல் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் WHO-CoPP சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (NIS), கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து சிறப்புச் சித்த மருத்துவப் புறநோயாளிகள் (OPD) பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் (S-IC Care) மூலமாகச் சிறப்பான சிகிச்சைகளை வழங்கி வருகிறது.
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (CCRS), சித்த மருத்துவத்தின் பாதுகாப்பையும் திறனையும் நவீன அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287031®=3&lang=1
****
TV/NB/SH
(रिलीज़ आईडी: 2287419)
आगंतुक पटल : 9