ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் தயாரிப்புகளுக்கான டிஜிட்டல் சந்தை அணுகல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு முறைகள்

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:53PM by PIB Chennai

ஆயுஷ் (சித்த மருத்துவம் உட்பட) மருந்துகளின் தரம் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகள் மூலம் ஆயுஷ் மருந்துகள் கண்காணிக்கப்படுகின்றன. பட்டியல் E(1)-இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை, தகுதியான சித்த/ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைச் சீட்டைப் பதிவேற்றம் செய்த பின்னரே ஆன்லைன் வணிக தளங்கள் விற்பனை செய்ய வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

அறிவுறுத்தியுள்ளது.

விளம்பரங்களைக் கண்காணிக்க 'ஆயுஷ் சுரக்ஷா போர்டல்' மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு மைய அதிகாரி (NPvCC) நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் WHO-CoPP சான்றிதழ், இந்தியத் தரக்கட்டுப்பாட்டு குழுமம் வழங்கும் 'ஆயுஷ் பிரீமியம் முத்திரை' மற்றும் AOGUSY திட்டம் மூலம் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் (ASSU&H), இந்த ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்குள் முதன்மையாகப் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நோயாளிகள் ஆன்லைன் வணிகத் தளங்களில் சித்த மருந்துகளை வாங்கும்போது, பதிவுபெற்ற சித்த மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287029&reg=3&lang=1

****

TV/NB/SH


(रिलीज़ आईडी: 2287393) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu