ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த நிதி ஆண்டில் ரூ.3,25,339 கோடி அளவிற்கு ஜவுளி ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 21 JUL 2026 2:14PM by PIB Chennai

உலகளாவிய தேவைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், மூலப்பொருட்களின் செலவுகளில் உள்ள வேறுபாடுகள், இதர வர்த்தகம் தொடர்பான சவால்களுக்கிடையே கைவினைப்பொருட்கள் உட்பட இந்தியாவின் ஜவுளி, ஆடை ஏற்றுமதி 2025-26-ம் ஆண்டில் ரூ. 3,25,339 கோடி அளவிற்கு நடைபெற்றுள்ளது. 2024-25-ம் ஆண்டில்       ரூ.3,19,573.2 கோடி அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்று இருந்த நிலையில், 1.8 சதவீத ஏற்றுமதி அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 2025-26-ம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கைவினைப்பொருட்கள் உட்பட ஜவுளிகள், ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதில், மத்தியப்பிரதேசத்திலிருந்து 2025-26-ம் ஆண்டில் ரூ.11,751.7 கோடி அளவிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் 2024-25-ம் ஆண்டில் ரூ.11,748.9 கோடி அளவிற்கு ஏற்றுமதியாகி இருந்தது. பீகாரிலிருந்து 2025-26-ம் ஆண்டில் ரூ.409 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. அம்மாநிலத்தில் 2024-25-ம் ஆண்டில் ரூ.375.6 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

பிரதமரின் பெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியங்கள் மற்றும் ஆடைகள் பூங்காக்கள் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், தேசிய தொழில்நுட்ப ஜவுளிகள் இயக்கம், ஜவுளித்துறையில் திறன் மேம்பாட்டுத் திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம், தேசிய கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286960&reg=3&lang=1

***

SS/IR/GS/SH

 


(रिलीज़ आईडी: 2287386) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Bengali-TR