சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் ஆரம்ப நிலை சுகாதார சேவைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்: மத்திய அரசு தகவல்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 2:01PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் மாநிலங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப, நிதி உதவிகளை வழங்கி வருகிறது. தொற்றா நோய்கள் தடுப்பு, கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு, ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் 770 மாவட்ட தொற்றா நோய் கிளினிக்குகள், 524 பகல் நேர புற்றுநோய் பராமரிப்பு மையங்கள், 233 இதய நலன் பராமரிப்பு பிரிவுகள், 6,410 சமூக சுகாதார மைய தொற்றா நோய் கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், நாட்டில் உள்ள 1.86 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு விரிவான சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 70 வயது, அதற்கு மேற்பட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் புதிதாக இணைக்கப்பட்டு பயன் பெற்று வருகின்றனர். தாய்மார்கள், குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் இலவச மருந்து, பரிசோதனை சேவைகள், ஆரோக்கியமான மகப்பேறுக்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286956®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2287383)
आगंतुक पटल : 11