திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் மேம்படுத்தப்பட்டு வரும் உள்கட்டமைப்பு வசதிகள்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:11PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சிக்கானத் தலைமை இயக்குநரகம், குறிப்பாக, தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தை நிர்வகித்து வருகிறது.
தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநில அரசுகளின் நிர்வாக, நிதி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இருப்பினும், தற்போதுள்ள மத்திய அரசு தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களை முன்மாதிரி தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களாக மேம்படுத்துதல், தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன் வலுவூட்டல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம், மாநில/யூனியன் பிரதேச அரசுகள் சுட்டிக்காட்டிய தேவைகளுக்கு ஏற்ப தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்ட்ரைவ் திட்டத்தின் கீழ், பயிற்சி முடித்தவர்களின் வேலைவாய்ப்பு விகிதங்களை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வு 2024-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களுக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, ஒரு தொடர் செயல்முறையாகும். இது பொதுவாக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 21 கைவினைஞர் பயிற்சித் திட்ட பாடநெறிகள், 15 குறுகிய காலப் பாடநெறிகள், 17 மீள்திறனுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையிலான பாடநெறிகள், ஒரு கைவினை பயிற்றுவிப்பாளர் பயிற்சித் திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டு, தேசிய தொழிற்கல்வி, பயிற்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சி அளிப்பதை மேலும் சீரமைக்கும் வகையில், 40 கைவினைஞர் பயிற்சித் திட்ட பாடநெறிகள் திருத்தியமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286578®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286874)
आगंतुक पटल : 7