வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் அமலாக்கம் குறித்த தற்போதைய நிலை
प्रविष्टि तिथि:
20 JUL 2026 7:25PM by PIB Chennai
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள நகர்ப்புற பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய உறுதியான வீடுகளை வழங்கும் நோக்கத்துடன், 25.06.2015 முதல் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
நிதி ஒதுக்கீட்டு முறை, செயல்படுத்தும் வழிமுறைகளில் மாற்றம் ஏதுமின்றி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில், இத்திட்டத்தின் கால அளவு 30.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்திய அனுபவங்களின் அடிப்படையில், மத்திய அமைச்சகம் இதனை மேம்படுத்தி, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0 -ல், அனைவருக்கும் வீடு என்ற புதிய இயக்கத்தை 01.09.2024 முதல் நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறங்களில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், கூடுதலாக, 1 கோடி தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டம் நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம், கூட்டு நடவடிக்கைகள் மூலம் மலிவு விலை வீடுகள், மலிவு விலை வாடகை வீடுகள், வட்டி மானியத் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் https://pmay-urban.gov.in/uploads/guidelines/Operational-Guidelines-of-PMAY-U-2.pdf என்ற இணைய தளத்தில் காண முடியும்.
13.07.2026 நிலவரப்படி, நாடு முழுவதும் 121.02 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 99.07 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், மொத்தம் 6.86 லட்சம் வீடுகளுக்கு (இதில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் கீழ் 0.18 லட்சம் வீடுகள் அடங்கும்) மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில், 6.74 லட்சத்திற்கும் அதிக வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 6.32 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286773®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2286849)
आगंतुक पटल : 19