ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கோவாவில் நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நில அளவைக்கான 'நக்ஷா' திட்டத்தின் கீழ் நிலத்தின் அசல் ஆவணங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மத்திய அரசு விளக்கம்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:23PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளத் துறை கோவாவில் அம்மாநில அரசுடன் இணைந்து நகர்ப்புற வாழ்விடப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தேசிய புவிசார் அறிவு சார்ந்த நில அளவைத் (நக்ஷா) திட்டம் குறித்த வதந்திகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இந்த நில அளவைப் பணியால் தற்போதைய சொத்துரிமைகள், எல்லைகள், நிலத்தின் அசல் ஆவணங்கள் ஆகியவற்றுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை, நகர்ப்புறத் திட்டமிடல், பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் ஒரு தரவு வரைபடப் பணியாகும்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள், கணக்கெடுப்பின் போது நேரில் இருக்க முடியாத நில உரிமையாளர்களின் உரிமைகளும் இதன் மூலம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. கணக்கெடுப்பின் போது நில உரிமையாளர் நேரில் இல்லாததால் சொத்துக்களுக்கு எந்த ஆபத்தும் நேராது என்றும், சட்டப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையிலேயே நிலத்தின் உரிமை தீர்மானிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இது நிலக் கையகப்படுத்துதல் சார்ந்த திட்டம் அல்ல என்பதால், இதன் மூலம் அரசு யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தாது.
சொத்து உரிமையாளர்கள் தங்களின் சொத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நில அளவை, நில ஆவணங்கள் ஆய்வாளர் அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை; நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குப் படிப்படியாக வழிகாட்டுவார்கள். வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு நில வளத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286590®=3&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2286833)
आगंतुक पटल : 10