கலாசாரத்துறை அமைச்சகம்
திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன- மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:19PM by PIB Chennai
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை நாடு முழுவதும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அப்பணிகள் நடைபெறும் இடங்கள், செலவினங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 101 திட்டங்களுக்கு இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட கட்டுமானப் பொருட்கள், எரியூட்டப்பட்ட இடங்கள், மண்பாண்டங்கள் மற்றும் நாணயங்கள், மணிகள், அணிகலன்கள், வேளாண் கருவிகள், எலும்பினால் செய்யப்பட்ட பொருட்கள் போன்ற தொல்பொருட்களின் மாதிரிகள் அறிவியல் ரீதியிலான உறுதிப்படுத்துதலுக்காக, பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு தொல்பொருள் திட்டத்தையும் தொடர்வது அல்லது நிறைவு செய்வது தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி தாலூகாவில் குமரிக்கல்பாளையத்தில் வாழ்விட குன்றுகளில் தற்போது அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இதுவரை ரூ.27,30,782 செலவிடப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகவாத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286588®=3&lang=1
****
TV/IR/LDN/RJ
(रिलीज़ आईडी: 2286830)
आगंतुक पटल : 15