கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 615 தொல்பொருட்கள் மீட்பு- மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:17PM by PIB Chennai

தொல்பொருட்களை திருடுவதை தடுக்க, மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கமான கண்காணிப்புப் பணியாளர்களுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், தளங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் தேவையின் அடிப்படையில் தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திருடப்பட்ட தகவல் கிடைத்தால் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. அத்துடன் திருடப்பட்ட அந்த தொல்பொருளை கண்டறியவும், வெளிநாட்டிற்கு கடத்துவதை தடுக்கவும் விழிப்புடன் இருக்கும் வகையில், சுங்கத்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகளுக்கு கண்காணிப்பு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

தொல்பொருட்களை மீண்டும் தாயகத்திற்கு கொண்டுவருவதற்காக வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் ஆகியவை இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

கடந்த 2024-ம் ஆண்டு திருடப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு பார்த்திவபுரத்தில் உள்ள பார்த்தசாரதி, கிருஷ்ணன் கோயிலில் இருந்து திருடப்பட்ட விஷ்ணு சிலை மீட்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 2026 ஜூன் 30 வரை வெளிநாடுகளில் இருந்து 615 தொல்பொருட்கள் மீட்கப்பட்டன.

இத்தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286586&reg=3&lang=1

****

TV /IR/LDN/RJ


(रिलीज़ आईडी: 2286826) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी