கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கையெழுத்துப் பிரதிகளின் ஆவணங்களை கலாச்சார அமைச்சகம் பராமரிக்கிறது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUL 2026 4:16PM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஞானபாரதம், கையெழுத்துப் பிரதிகளின் ஆவணங்களை தமது இணையதளத்தில் பராமரிக்கிறது. அதன்படி, ஞானபாரதம் இணையதளத்தில் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் விவரங்கள் மூலப்பொருட்கள் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளன.

83,045 கையெழுத்துப் பிரதிகள் காகித வடிவிலும், 5,772 கையெழுத்துப் பிரதிகள் பனைஓலை வடிவிலும், 3 கையெழுத்துப் பிரதிகள் பிரிச் மரப்பட்டை வடிவிலும் உள்ளன.

எனினும், ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் பல்வேறு வரலாற்றுக் காலத்தை சார்ந்ததாகும்.

இத்தகவலை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286583&reg=3&lang=1

***

TV/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2286824) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi