தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமம் வழங்கப்பட்ட பகுதிகளில், மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் ஆய்வு செய்கிறது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:05PM by PIB Chennai

பொது தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின்  தகவலுக்காக, ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள ஹமிர்பூர், பிலாஸ்பூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், மே 2026-ல் நடத்தப்பட்ட தானியங்கி சோதனை முடிவுகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் மொபைல் சேவைகளின் (குரல்,  தரவு ஆகிய இரண்டிலும்) தரநிலையை  மதிப்பிடுவதும், சரிபார்ப்பதும் இந்த சோதனையின்  நோக்கமாகும்.

இந்த ஆய்வின் போது, தொலைத்தொடர்பு சமிக்ஞைகள், அழைப்புக்களின் துண்டிப்பு விகிதம், அழைப்புக்கான இணைப்புகளின் வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், பதிவேற்றம், அதன் வேகம் போன்ற முக்கிய சேவைகளின் தரநிலைகளுக்கான அளவீடுகளில் சேவை வழங்குநர்களின் செயல்திறனை ட்ராய் பதிவு செய்கிறது. பின்னர், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கவும், சேவை வழங்குநர்கள் தங்களது  சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் இந்த முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இவ்வகையான ஆய்வுகளில், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி அலைக்கற்றைகளில் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி நேரடித் தரவு, குரல் அழைப்புகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகப் பல்வறு மேம்பட்ட சோதனை அலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்தச் செயல்பாடுகள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286575&reg=3&lang=1

 

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2286815) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी