தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை ட்ராய் ஆய்வு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUL 2026 3:34PM by PIB Chennai

தொலைத்தொடர்பு நுகர்வோர்களின் தகவல்களுக்காக தமிழ்நாட்டின் விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் மொபைல் நெட்வொர்க் தரம் குறித்து 2026 ஜூன் மாதத்தில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) ஆய்வு செய்தது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் மொபைல் நெட்வர்க் சேவைகளின் (குரல் மற்றும் தரவு) நிகழ்நேர தரம் குறித்து மதிப்பீடு செய்யவும் சரிபார்க்கவும் இச்சோதனை நடத்தப்பட்டது.

இதற்காக நகர பகுதிகள், முக்கிய இடங்கள், பொதுபோக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்குகளின் சிம்காடுகளை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு மேம்பட்ட கைபேசிகள் பயன்படுத்தப்பட்டன.

இதற்காக நியமிக்கப்பட்ட முகமைகள் மூலம் நகரப்பகுதிகளில் 273.1 கிலோமீட்டர், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் 4 முக்கியப் பகுதிகள் ஆகியவற்றில் 2026 ஜூன் 16 முதல் ஜூன் 18 வரை ட்ராய் சோதனை நடத்தியது. ஐதராபாதிலுள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இச்சோதனைகள் நடைபெற்றன.

இது குறித்த தகவல்களை www.trai.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286531&reg=3&lang=1

***

SS/IR/SJ/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2286808) வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी