சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஜிப்மரில் அதிநவீன மருத்துவ நோய் எதிர்ப்பு ஆய்வகத்தை திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 8:12PM by PIB Chennai
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், ஐ.ஏ.எஸ். (ஓய்வு) புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ நோய் எதிர்ப்பு (Clinical Immunology) ஆய்வகத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்.

ஜிப்மரின் மருத்துவ நோய் எதிர்ப்பியல் துறை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune disease) (உடலின் தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தன்னைத்தானே எதிரியாகக் கருதி உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கி அழிக்கிறது) கொண்ட நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இத்துறை, இவ்வகை சிக்கலான நோய்களுக்கு முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போது அதிநவீன நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் புதிய மருத்துவ நோய் எதிர்ப்பு ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதி புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் பயனளிக்கும்.
இந்த ஆய்வகத்தில் பல்வேறு அதிநவீன நோயறிதல் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ இம்யூன் நோய்களைக் கண்டறிவதற்கான ELISA, Nephelometry மற்றும் Immunoblot உள்ளிட்ட கருவிகளுடன் கூடிய தனித்துவமான நோயறிதல் பிரிவு இதில் அமைந்துள்ளது.
தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தலைமையில் ஜிப்மரின் சேதராப்பட்டு வளாக விரிவாக்கத் திட்டம் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி அரசின் மற்றும் ஜிப்மரின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வளர்ந்து வரும் பிராந்திய சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சேதராப்பட்டு வளாகத்தை உலகத் தரம் வாய்ந்த சுகாதாரம், கல்வி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையமாக உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர், ஜிப்மரின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆளுநர் பார்வையிட்டார். தொடர்ந்து தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் திட்டத்தின் ஒரு பகுதியாக, துணைநிலை ஆளுநர் ஜிப்மர் வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
***
TV/RJ
(रिलीज़ आईडी: 2286799)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English