திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தமிழ்நாட்டில் ஐடிஐ-களின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUL 2026 4:17PM by PIB Chennai
தமிழ்நாட்டில் ஐடிஐ-களின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 403-ல் இருந்து, 2026-ல் 415 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், பிரதமரின் சேது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் சென்னை பெரியார் நகரிலுள்ள தேசியத் திறன் பயிற்சி நிறுவனம் (என்எஸ்டிஐ), புவனேஷ்வர், ஹைதராபாத், கான்பூர், லூதியானா ஆகிய நகரங்களுடன் இணைந்து உள்கட்டமைப்பு, திறன் மேம்பாட்டுத் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அரசு ஐடிஐ-கள் அதிநவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளன. அதுபோல, 2014-15-ம் கல்வியாண்டில் 38,722 ஆக இருந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை, 2025-26-ம் கல்வியாண்டில் 39,119 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஐடிஐ-களின் எண்ணிக்கை 9,642-லிருந்து 13,856 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
நாடு முழுவதும் தொழிற்பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் மேம்படுத்தப்பட்ட ஐடிஐ-கள் மூலம் பிரதமரின் திறன், வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை (பிஎம்-சேது) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சர்வதேசப் பங்களிப்புடன் பயிற்சியாளர்களுக்கான மேம்பட்ட பயிற்சி, பாடத்திட்ட வடிவமைப்பு, துறை சார்ந்த தேசிய சிறப்பு மையங்களை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286584®=3&lang=1
****
TV/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2286787)
வருகையாளர் எண்ணிக்கை : 59